ரஜினி டிவி.. அஜித் படம்...என்ன செய்ய போகிறார் பாண்டே? Description: ரஜினி டிவி.. அஜித் படம்...என்ன செய்ய போகிறார் பாண்டே?

ரஜினி டிவி.. அஜித் படம்...என்ன செய்ய போகிறார் பாண்டே?


ரஜினி டிவி.. அஜித் படம்...என்ன செய்ய போகிறார் பாண்டே?

தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த ரங்கராஜ் பாண்டே அண்மையில் தன் வேலையை ராஜினாமா செய்தார். அடுத்து அவர் எங்கு செல்வார் என நெட்டிசன்கள் அவர்களுக்குள் விவாதித்து வரும் நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.செய்தித் தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உச்சத்தில் கொண்டு சென்றதில் ரங்கராஜ் பாண்டேவின் பங்களிப்பு அதிகம். நன்கு பீக்கில் இருந்த போதே திடீரென பதவியை பாண்டே ராஜினாமா செய்தார். தொடர்ந்து சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் பெயர் வெளியிடப்படாத படத்தின் பூஜையிலும் நிற்கிறார் பாண்டே. இதை மையமாக வைத்தே அஜித் படத்தில் முக்கிய பாத்திரத்தில் பாண்டே நடிக்கிறார் என்றும் பேசுகின்றனர்.

இதேபோல் விரைவில் அரசியல் கட்சித் துவங்க உள்ள ரஜினி அதற்கு முன்னோட்டமாக தனி சேனல் தொடங்க இருக்கிறாராம். திமுகவுக்கு கலைஞர் டிவி, அதிமுகவுக்கு நியூஸ் ஜே, தினகரனுக்கு ஜெயா டிவி என இருக்கும் போது, தன் பங்கிற்கும் சேனல் இருக்க வேண்டும் என விரும்புகிறார் ரஜினி. அந்த சேனலின் முக்கியப் பொறுப்புக்கு பாண்டே செல்கிறார் என்றும் தகவல்கள் வருகிறது.


நண்பர்களுடன் பகிர :