எழுத்தாளராகவும் மாறிய பிரதமர் மோடி! Description: எழுத்தாளராகவும் மாறிய பிரதமர் மோடி!

எழுத்தாளராகவும் மாறிய பிரதமர் மோடி!


எழுத்தாளராகவும் மாறிய பிரதமர் மோடி!

என்ன தலைப்பை பார்த்ததும் நம் பிரதமர் நரேந்திர மோடி எழுத்தாளர் ஆகவும் பரிணமிக்கிறாரா என ஆச்சர்யப்படுகிறீர்களா? உண்மைதான். அதைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் மேலே படியுங்கள்...

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வினை தைரியமாக எதிர்கொள்வதற்காக புத்தகம் எழுதியுள்ளார். இப்புத்தகம் இதுவரை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளி வந்துள்ளது. ஆங்கிலத்தில் இப்புத்தகத்துக்கு ‘’எக்ஸாம் வாரியர்ஸ்” என பெயரிடப்பட்டிருந்தது. இப்போது இப்புத்தகம் ‘’பரீட்சைக்கு பயமேன்” என்னும் தலைப்பில் தமிழில் வந்துள்ளது. மொத்தம் 208 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் தேர்வினை மன தைரியத்தோடு எதிர்கொள்வது, அமைதியாக படித்து சாதிப்பது என பல அறிவுரைகளையும் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி.

இப்புத்தகம் இப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. புத்தகம் எழுதிவிட்ட பிரதமரை எழுத்தாளர் என்றும் சொல்லலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :