விநாயகருக்கு குல்லா, ஸ்வெட்டர்: இது வட இந்திய பக்தி... Description: விநாயகருக்கு குல்லா, ஸ்வெட்டர்: இது வட இந்திய பக்தி...

விநாயகருக்கு குல்லா, ஸ்வெட்டர்: இது வட இந்திய பக்தி...


விநாயகருக்கு குல்லா, ஸ்வெட்டர்: இது வட இந்திய பக்தி...

இந்துக் கடவுள்களில் முதன்மையர் விநாயகர். அதனால் தான் எந்த செயலைத் துவங்கும் போதும், ‘’விநாயகர் சுழி’’ போட்டு செயலை துவங்குகின்றனர். அப்படிப்பட்ட விநாயகருக்கு பெரும் பக்தர்கள் கூட்டம் உண்டு. இங்கு பக்தி மிகுதியில் பட இந்தியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

தற்போது ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேச மாநிலங்களில் கடும் குளிர் அடித்து வருகிறது. தலைநகர் டெல்லியிலோ குளிரின் உச்சத்தில் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் தான் மனிதர்களைப் போல் விநாயகருக்கும் குளிரும் என ஸ்வெட்டர் போர்த்தி விட்டுள்ளனர் வடமாநிலத்தவர்.அந்த வகையில் புனேயில் பிரசித்தி பெற்ற சரஸ்பாக் கணபதி கோயிலில் உள்ள சித்தி விநாயகர் சிலைக்கு குளிர் பாதுகாப்பாக தலையில் குல்லா, உடம்பில் ஸ்வெட்டர் போட்டு விட்டுள்ளனர்.

இந்த பிள்ளையார் பாசம் வெளியில் இருந்து பார்த்தால் வித்தியாசமாகத் தெரிந்தாலும் அவர்களோ தங்கள் அதிக பக்தியின் வெளிப்பாடு தான் இது! என்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :