அடங்க மறு படம் எப்படி இருக்கு? திரைப் பார்வை Description: அடங்க மறு படம் எப்படி இருக்கு? திரைப் பார்வை

அடங்க மறு படம் எப்படி இருக்கு? திரைப் பார்வை


அடங்க மறு படம் எப்படி இருக்கு? திரைப் பார்வை

ஜெயம் ரவி நடிப்பில் டிக்..டிக்..டிக் படத்துக்கு பின்னர் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் அடங்க மறு. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள இந்த படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க...

அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அவர்களது குழந்தைகள்ன்ன்னு மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் ஜெயம் ரவியோடது. ராஷி கண்ணா அவரோட காதலி. பேமிலியில் ஜாலி பாய், காதலியிடம் பிளே பாய்ன்னு ஜம்முன்னு வாழ்க்கை போயிட்டு இருக்கும் போதே போலீஸ் துறையில் எஸ்.ஐ வேலை கிடைக்குது ஜெயம் ரவிக்கு. அவருக்கு உற்சாகமா கிளம்பி போகிறாரு. அங்க போன பின்னாடி தான் போலீஸ் டிப்பார்ட்மெண்டில் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகள், வசதியானவங்களும் வைச்சது தான் சட்டம். யூனிபார்ம் போட்ட வேலைக்காரன் ஜாப் தான் எஸ்.ஐ பதவின்னு ஆதங்கப்படுறாரு.அந்த நேரத்தில் ஒரு கட்டிடத்தில் இருந்து ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்குது. தற்கொலைன்னு போலீஸ்காரங்க கேஸை முடிக்கும் போது, ஜெயம் ரவி இன்வெஸ்டிகேசன் பண்ணி அது கொலைன்னு கண்டு பிடிக்கிறாரு. ஊருல நாலு வசதியான வீட்டு பசங்க, இப்படி பல பெண்களை அங்க கூட்டிட்டு போய் கெடுத்து, கொலை செய்திருப்பதையும் கண்டுபிடிக்காரு,. உடனே நடவடிக்கையும் எடுக்கிறாரு ஜெயம் ரவி. தன் அப்பாக்களோட செல்வாக்கால் 20 நிமிடங்களிலேயே ஜெயிலில் இருந்து வெளியே வருகின்றனர் குற்றவாளிகள்.

ஜெயம் ரவி மீது உள்ள கோபத்தால் அவரது குடும்பத்தையே கொலை செய்கின்றனர். பதிலுக்கு ஜெயம் ரவி யூனிபார்மை கழட்டி போட்டு விட்டு ஒரு பப்ளிக் காக அவர்களை கொல்வது தான் கதை. சாம் சி.எஸ்ஸின் இசை நன்றாக உள்ளது. ஜெயம் ரவி தனது வழக்கம் போல் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். போலீஸாக வரும் முனீஸ்காந்த், மைம்கோபி ஆகியோர் ஸ்கோர் செய்கின்றனர்.

வழக்கமான போலீஸ் படம் போல் இல்லாமல், அதில் கொஞ்சம் சயின்ஸ் வெர்சனோடு பக்காவாக வந்துள்ளது அடங்க மறு...திரையரங்கில் போய் பாருங்க.

மதிப்பெண்: 55/100


நண்பர்களுடன் பகிர :