மீண்டு(ம்) வருகிறார் வடிவேல்...சிரிக்கத் தயாராகுங்க... Description: மீண்டு(ம்) வருகிறார் வடிவேல்...சிரிக்கத் தயாராகுங்க...

மீண்டு(ம்) வருகிறார் வடிவேல்...சிரிக்கத் தயாராகுங்க...


மீண்டு(ம்) வருகிறார் வடிவேல்...சிரிக்கத் தயாராகுங்க...

வைகைப்புயல் வடிவேலுவின் காமெடியை பிடிக்காதவர்களே தமிழகத்தில் கிடையாது. எப்படிப்பட்ட உடல், மனச்சோர்வையும் அவரது நகைச்சுவை போக்கி விடும் ஆற்றல் கொண்டது. ஆனால் வடிவேல் அண்மைக்காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது அவர் படு உற்சாகமாக மீண்டும் நாயகனாகவே நடிக்க உள்ளார்.

இது நிச்சயம் வடிவேல் ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தி தான். சிம்புத்தேவன் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ‘’இம்சை அரசன் 23ம் புலிகேசி” வடிவேல் கதாநாயகனாக நடித்த இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்துக்கு திட்டமிட்டார் சிம்புதேவன். வடிவேல் கதை நாயகனாகவும், மீண்டும் ஷங்கரே தயாராகிக்கவும் முடிவானது. ஆனால் சில கருத்துவேறுபாடு காரணமாக இந்த ப்ராஜெட்டில் இருந்து விலகிக் கொண்டார் வடிவேல். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஷங்கர்_வடிவேல் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவிலேயே சூட்டிங் கிளம்புகிறார்கள். ஆக இம்சை அரசன் 23ம் புலிகேசி பார்ட் டூவை விரைவில் பார்க்கலாம்!


நண்பர்களுடன் பகிர :