"நீயா" பட பாணியில் பலி வாங்கிய பாம்பு... Description: "நீயா" பட பாணியில் பலி வாங்கிய பாம்பு...

"நீயா" பட பாணியில் பலி வாங்கிய பாம்பு...
தனது ஜோடி பாம்பை கொன்றவரை நீயா பட பாணியில் திரும்பி வந்து பாம்பு ஒன்று பலி வாங்கியுள்ளது.

பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் விவசாயிகளோ களத்து மேட்டுக்கு செல்கையில் அடிக்கடி பாம்பை சந்திப்பது உண்டு. அப்படியொரு விவசாயியின் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இது.காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கஞ்சங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுசீலா. இவர்கள் இருவரும் சேர்ந்து பிளாஸ்டிக், அலுமினியப் பொருள்களை வீடு,. வீடாகப் போய் விற்கும் வேலை செய்கின்றனர். அப்படி செல்லாத நாள்களில் முருகேசன் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார். அப்படி வீட்டுப்ப்பக்கத்தில் மேய்ச்சலுக்கு அழைத்துப் போனார் முருகேசன்.

அப்போது அங்கு பாம்பு ஜோடி ஒன்று தங்களுக்குள் சேர்ந்து கொண்டிருந்தன. அப்போது ஆடுகளுக்கு குலை அறுக்க வைத்திருந்த கத்தியால் ஒரு பாம்பை வெட்டினார். அது உடனே துடி,துடித்து இறந்தது. மற்றொரு பாம்பு ஓடிவிட்டது. இதன் பின்னர் முருகேசன் மீண்டும் மேய்ச்சல் பணியை செய்தார். ஒருமணி நேரத்துக்கு பின்பு தன் ஜோடியை கொன்ற முருகேசனை தேடி வந்து தப்பிப்போன பாம்பு கொன்றது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார் முருகேசன்.

நீயா பட பாணியில் தேடி வந்த பாம்பு, தேறி போனாலும் தேடி வருவோ என அச்சத்தில் உள்ளனர் முருகேசன் உறவினர்கள்!


நண்பர்களுடன் பகிர :