விஞ்ஞானியால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாதவன் Description: விஞ்ஞானியால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாதவன்

விஞ்ஞானியால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாதவன்


விஞ்ஞானியால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு அறிமுகமே தேவையில்லை. கிரையோஜெனிக் தொழில்நுட்பங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைதானவர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தன் மேல் தவறு இல்லை என நிரூபித்ததால் அரசிடமே 50 லட்சம் இழப்பீடும் பெற்றவர்.

விஞ்ஞானி நம்பிநாராயணின் வாழ்க்கையை நடிகர் மாதவன் படமாக எடுத்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் தயாராகி வரும் இப்படத்தில் நடிகர் மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்தும் வருகிறார். இந்நிலையில் நம்பி நாராயணனின் உறவினராக இசையமைப்பாளரும், இயக்குநருமான குமரன் நம்பியை வைத்து ஏற்கனவே தான் சீரியல் எடுத்துள்ளதாகவும், படமாக வந்தால் சீரியல் எடுத்த படம் நஷ்டமாகி விடும் எனவும் டரியல் கிளப்பி பஞ்சாயத்துக்கு வந்துள்ளார். மாதவனின் வளர்ந்து வரும் படத்துக்கும் தடை கோரியுள்ளார் குமரன்.

களவாணி படத்தில் "டம்ம...டம்ம...டம்மா" பாடல் மெகாஹிட்டானது. அந்த படத்துக்கு இசையமைத்தது இந்த குமரன் தான். விஞ்ஞானி வீட்டு வில்லங்க்த்தில் சிக்கி இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் பேசி வருகிறார் நடிகர் மாதவன்!


நண்பர்களுடன் பகிர :