நடுரோட்ல தான் நின்னுருப்பேன்: நன்றி மறக்காத தனுஷ்... Description: நடுரோட்ல தான் நின்னுருப்பேன்: நன்றி மறக்காத தனுஷ்...

நடுரோட்ல தான் நின்னுருப்பேன்: நன்றி மறக்காத தனுஷ்...


நடுரோட்ல தான் நின்னுருப்பேன்: நன்றி மறக்காத தனுஷ்...

மனதில் தோன்றியதை அப்படியே பேசி விடுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வழக்கம். அதேபோல் அவரது மருமகன் தனுஷ்ம் அப்படியே பேச விழா மேடையே நெகிழ்ந்து போனது.

தனுஷ் நடித்துள்ள மாரி பாகம் 2 நாளை மறுதினம் வெளியாகிறது. மாரி 1 பெற்ற வெற்றியினால் இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய தனுஷ், ‘’துள்ளுவதோ இளமை படம் 6 புதுமுகங்கள் சேர்ந்து நடித்தது. ஆனால் அந்த படத்தின் அடையாளமே யுவனின் இசை தான். அந்த படம் மட்டும் ஓடவில்லை எனில் நாங்கள் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம். எங்களுக்கு அப்போது அடையாளத்தைக் கொடுத்ததே யுவனின் இசை தான். எனக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்ததில் யுவனின் பங்கு அதிகம்” என பேசினார்.

உள்ளத்தில் இருந்து தனுஷ் பேச, மொத்த படக்குழுவும் உருகிப் போனது. சூப்பர் ஸ்டாரின் சூப்பர் மருமகன்னா சும்மாவா?


நண்பர்களுடன் பகிர :