பணம் கையாடல் செய்தாரா நடிகர் விஷால்? அதிரவைக்கும் குற்றச்சாட்டு...பதில் சொல்வாரா விஷால் Description: பணம் கையாடல் செய்தாரா நடிகர் விஷால்? அதிரவைக்கும் குற்றச்சாட்டு...பதில் சொல்வாரா விஷால்

பணம் கையாடல் செய்தாரா நடிகர் விஷால்? அதிரவைக்கும் குற்றச்சாட்டு...பதில் சொல்வாரா விஷால்


பணம் கையாடல் செய்தாரா நடிகர் விஷால்?  அதிரவைக்கும் குற்றச்சாட்டு...பதில் சொல்வாரா விஷால்

நடிகர் சங்கத் தலைவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என கோடாம்பாக்கத்தில் பவர்புல் பதவிகளைக் கொண்ட மனிதராக வலம் வந்தவர் விஷால். ஆனால் இப்போது விஷால் எங்கே என கோடம்பாக்கத்தினர் தேடும் அளவுக்கு அவரது நிலமை ஆகிவிட்டது.

கடந்த 2017 ஏப்ரல் 6ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆனார் விஷால். துவக்கத்தில் எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் இடைக்காலமாக நடிகர் சங்கத்தில் பல்வேறு குழப்பங்கள் தலைதூக்கின. விசால், சக நிர்வாகிகளான பிரகாஷ்ராஜ், கொளதம் மேனன் ஆகியோர் அலுவலகம் பக்கமே வருவதில்லை என்னும் குற்றச்சாட்டும் அதில் ஒன்று!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின் போது விஷாலின் பக்கம் அவருக்கு அனுசரணையாக இருந்த முன்னாள் எம்.பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ்ம் விஷாலுக்கு எதிர்திசையில் திரும்பிவிட்டார். இந்நிலையில் தி நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வந்த அதன் நிர்வாகிகள் விசாலுக்கு எதிராக ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்தனர். அப்போது பட ரிலீஷ் விவகாரத்திலும் ஒரு தரப்பினருக்கு அனுசரனையாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினர்.

விசாலுக்கு கண்டணம் தெரிவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கே பூட்டும் போட்டுள்ளனர். விஷால் பணம் கையாடல் செய்திருப்பதாக முதல்வரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் பரபரப்பை பற்றவைத்துள்ளார் ஜே.கே.ரித்தீஷ். பதில் சொல்ல வேண்டிய விஷாலோ இதுவரை ஊடகத்தினரிடம் சிக்காமல் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்.


நண்பர்களுடன் பகிர :