நம்மை விட்டு பிரிந்த அஞ்சு ரூபாய் டாக்டர்... ஆச்சர்ய மனிதரை அள்ளிக் கொண்ட இயற்கை Description: நம்மை விட்டு பிரிந்த அஞ்சு ரூபாய் டாக்டர்... ஆச்சர்ய மனிதரை அள்ளிக் கொண்ட இயற்கை

நம்மை விட்டு பிரிந்த அஞ்சு ரூபாய் டாக்டர்... ஆச்சர்ய மனிதரை அள்ளிக் கொண்ட இயற்கை


நம்மை விட்டு பிரிந்த அஞ்சு ரூபாய் டாக்டர்... ஆச்சர்ய மனிதரை அள்ளிக் கொண்ட இயற்கை

மெர்சல் திரைப்படத்தில் 10 ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவ சேவை செய்வார் நடிகர் விஜய். நிஜத்தில் இதெல்லாம் சாத்தியமா? என படம் பார்த்துவிட்டு நமக்குள் கேள்வி கேட்டிருப்போம். பத்து ரூபாய் அல்ல, ஐந்து ரூபாய்க்கே வைத்தியம் பார்த்து வந்தார் ஜெயச்சந்திரன். இன்று அவர் இறந்துவிட சென்னை வாசிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கல்பாக்கம் பக்கத்தில் கொடைப்பட்டினம் கிராமம் தான் ஜெயச்சந்திரனின் பூர்வீகம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெயச்சந்திரன் தன் சுற்றுவட்டாரத்தில் மருத்துவவசதி இல்லாத குறையை போக்கவே டாக்டருக்கு படித்தார்.வண்ணாரப்பேட்டை வெங்கடாச்சலம் தெருவில் கிளீனிக் போட்ட ஜெயச்சந்திரன் 2 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கத் துவங்கி, சமீபகாலமாக 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வந்தார். ஒரு கப் டீயே 8 ரூபாய் ஆகிவிட்ட நிலையில் இது எவ்வளவு பெரிய சேவை? இவரது மனைவி, வாரிசுகளும் கூட மருத்துவர்கள் தான். இப்பகுதியில் அவர் நேதாஜி பெயரில் சேவை அமைப்பையும் நடத்தி வந்தார்.

இப்படி எல்லாருக்கும் பிடித்த ஜெயச்சந்திரனை இறைவனுக்கும் பிடித்ததாலோ என்னவோ 71ம் வயதில் இன்று உடல் நலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

அஞ்சு ரூபாய் டாக்டருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!


நண்பர்களுடன் பகிர :