சபரிமலை ஐயப்பனை தரிசித்த திருநங்கைகள் Description: சபரிமலை ஐயப்பனை தரிசித்த திருநங்கைகள்

சபரிமலை ஐயப்பனை தரிசித்த திருநங்கைகள்


சபரிமலை ஐயப்பனை  தரிசித்த திருநங்கைகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு கூறியது கோர்ட்.

ஆனால் இத்தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளவயது பெண்களை அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடந்து வருகிறது. அப்படிச் செல்லும் பெண்களையும் ஐயப்ப பக்தர்களின் போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் இன்று சபரிமலைக்கு நான்கு திருநங்கைகள் வந்தனர். அவர்கள் இருமுடி கட்டோடு மலை ஏறி, சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இள வயது பெண்கள் வருகைக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் நிலையில் மூன்றாம் பாலினத்தர் வந்து தரிசித்து சென்றிருக்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :