ப்ளீஸ் என்னை விட்டுடுங்க... கதறும் மரங்களின் சத்தம் கேட்குதா? Description: ப்ளீஸ் என்னை விட்டுடுங்க... கதறும் மரங்களின் சத்தம் கேட்குதா?

ப்ளீஸ் என்னை விட்டுடுங்க... கதறும் மரங்களின் சத்தம் கேட்குதா?


ப்ளீஸ் என்னை விட்டுடுங்க... கதறும் மரங்களின் சத்தம் கேட்குதா?

அண்மைக்காலமாக சாலையோர மரங்கள் விளம்பரங்களை சுமக்கும் காட்சிக்கூடமாக மாறி வருகிறது. செப்டிங்டேங் கிளீனிங் விளம்பரத்தில் துவங்கி, அந்த, அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் ஆள் சேர்ப்பு விளம்பரங்கள் வரை அதில் அடக்கம். நிழல், ஆக்சிஜன் உற்பத்தி என பலவகைகளிலும் கை கொடுக்கும் மரங்கள் இப்போது விளம்பரத்தை காட்சிப்படுத்தும் கூடமாய் மாறிநிற்கிறது.

பொதுவாவே மரங்கள் அதன் வேர் பகுதியில் இருந்து தான் சத்தை எடுத்து, இலை நுனி வரைக்கும் கொண்டு செல்லும். இதனால் தான் மரமும் நன்கு பசுமையாக வளர்கிறது. ஆனால் இதைத் தடுக்கும் விதமாக மரத்தோட பட்டையில் ஆணி அடிப்பதனால் மரங்களுக்கு வேரில் இருந்து சத்தை கடத்துவதிலும் மிகப்பெரிய அளவிலான சிக்கல்கள் ஏற்படுகிறது. அதிலும் விளம்பர பதாகை வைப்பதற்காக ஆணி அடித்த துவாரப் பகுதிகளில் பூஞ்சான் மற்றும் பாக்டீரியாக்கள் கூட வருவதற்கான வாய்ப்புக்களும் நிறையவே இருக்கிறது.துவக்கத்தில் கொஞ்ச காலத்துக்கு கவர்ச்சியா இருக்குற இந்த விளம்பரப் பலகை நாள்பட, நாள்பட மழையில் நனைந்து ஆணி துருப்பிடித்து விடும். அந்த நேரத்தில் ஆணியோடு சேர்ந்து பலகை/தகடும் கீழ விழுந்துவிடும். ஆணி விழுந்ததும் அந்த ஓட்டையில் "தண்டு துளைக்ககூடிய புழுக்கள்"{stemborer}வந்து தஞ்சம் புகுந்து விடுமாம். இது தன்னோட பங்குக்கு மரங்களுக்கு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்

ப்ளீஸ் என்னை விட்டுடுங்கன்னு மரங்களால் கத்த முடியாது. ஆனால் அவை உள்ளுக்குள் எழுப்பும் குரல் உங்களுக்கு கேட்டால் நீங்களும் இயற்கை ஆர்வலர் தான்!


நண்பர்களுடன் பகிர :