பரபரப்புக்காக நடிகை அமலாபால் செய்யும் வேலையை பாருங்க.. Description: பரபரப்புக்காக நடிகை அமலாபால் செய்யும் வேலையை பாருங்க..

பரபரப்புக்காக நடிகை அமலாபால் செய்யும் வேலையை பாருங்க..


பரபரப்புக்காக நடிகை அமலாபால் செய்யும் வேலையை பாருங்க..

சிந்துசமவெளி திரைப்படத்தில் ‘’சுந்தரி’’யாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அமலாபால். மைனா படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். இடையே திருமணம், மணமுறிவு என்று சென்றுவிட மீண்டும் நடிக்க வந்துவிட்டார். இப்போது பரபரப்புக்காக அவர் எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் சர்ச்சையாகி உள்ளது.

நட்சத்திர இயக்குனரான விஜயை காதலித்து மணந்த அமலாபால், 2016ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்தார். அதன் பின்னர் மீண்டும் நடிக்க வந்த அமலாபாலுக்கு விஷ்ணு விசாலுடன் சேர்ந்து நடித்த ‘ராட்சசன்’ மெகா ஹிட்டானது. அதன் பின்னர் விஷ்ணு விசாலும், அமலாபாலும் காதலிப்பதாகவும், அமலாபாலைப் போலவே விஷ்ணுவும் விவாகரத்து ஆனவர் எனவும் சர்ச்சைகள் ரெக்கை கட்டிப் பறந்தது. இதை விஷ்ணு மறுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அமலாபால் நடிக்கும் ஆடை படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ஆடையே இல்லாமல் உடல் முழுவதும் பேண்டேஜால் சூழப்பட்டு போஸ்டரில் இருந்தார் அமலா பால். இதுவும் கடும் விமர்சன்ச்த்துக்கு உள்ளது. இப்போது அவர் புகைபிடிப்பது போல் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் அவரே போட்டுள்ளார். அதில் அவர், நான் மற்றவர்களை புகைப்பிடிக்க தூண்டவில்லை. நடிகர்கள் சிலரைப் போல் போஸ்க்கான எடுத்துள்ளேன் எனவும் எழுதியுள்ளாராம்.

மீண்டும் பட வாய்ப்புகளில் பிசியாக வலம் வர விரும்பும் அமலாபால் தான் எப்போதும் பேசுபொருளாக இருக்கவே இப்படி செய்கிறார் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்! ஆனாலும் அமலாபால் இப்படிச் செய்யலாமா? என செல்லமாய் அழைத்து கண்டித்துள்ளனர் அவரது நட்பு வட்டத்தினர்!


நண்பர்களுடன் பகிர :