விஜய் சேதுபதியின் சீதக்காதி கதை இது தான்! Description: விஜய் சேதுபதியின் சீதக்காதி கதை இது தான்!

விஜய் சேதுபதியின் சீதக்காதி கதை இது தான்!


  விஜய் சேதுபதியின் சீதக்காதி கதை இது தான்!

விஜய் சேதுபதி 70 வயது முதியவராக நடிக்கும் சீதக்காதி படம் வரும் 20ம் தேதி(நாளை மறுதினம்) வெளியாகிறது.இப்படத்தில் துரு, துருவென படங்களில் கலக்கும் விஜய் சேதுபதி முதியவராக நடித்திருப்பதால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

என்னாச்சு? கிரிக்கெட் விளையாண்டோம். பந்து மேல போச்சு. நீதான அடிச்ச? என்னும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் டயலாக்கை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அந்த மெகாஹிட் காமெடி படத்தை இயக்குன அதே பாலாஜி தரணிதரன் தான் சீதக்காதி படத்தை இயக்கி இருக்காரு.

சீதக்காதி தாத்தா தான் நம்ம விஜய் சேதுபதி. அவருக்கு நாடகக் கலை மேல தீராத வெறி. சினிமா சான்ஸ் கிடைச்சும் மக்கள் முன்னாடி தான் நடிப்பேன்னு மல்லுக்கட்டி நாப்பது, அம்பது வருசமா ஒரே மேடையில் கூத்து கட்டுற கலைஞன். ஒருநாளு ஸ்டேஜ்ல பெர்மார்மஸ் பண்ணும் போதே உயிரை விடுகிறார் சீதக்காதி.

அந்நேரம் அவரது வீட்டில் பொருளாதார நெருக்கடியும் கழுத்தை நெறிக்கிறது. செத்துப் போன சீதக்காதி ஆவி அரங்கை சுற்றுவது தெரிந்து, ஆவியை சினிமாவில் நடிக்க வைத்து குடும்ப கஷ்டத்தை போக்க முயற்சிக்கிறார் சீதக்காதி விஜய் சேதுபதியின் நண்பராக வரும் மொளலி. அந்த முயற்சி ஜெயித்ததா என பின்பகுதியில் காமெடியாகவும், முன்பகுதியில் சீரியஸாகவும் பேசுகிறது படம்...

செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது இது தானோ..?


நண்பர்களுடன் பகிர :