தந்தை மீது போலீஸில் புகார் கொடுத்த கெத்து சிறுமி. தயாராகிடுச்சு பக்காவான கக்கூஸ்... Description: தந்தை மீது போலீஸில் புகார் கொடுத்த கெத்து சிறுமி. தயாராகிடுச்சு பக்காவான கக்கூஸ்...

தந்தை மீது போலீஸில் புகார் கொடுத்த கெத்து சிறுமி. தயாராகிடுச்சு பக்காவான கக்கூஸ்...


தந்தை மீது போலீஸில் புகார் கொடுத்த கெத்து சிறுமி.   தயாராகிடுச்சு பக்காவான கக்கூஸ்...

கக்கூஸா என தலைப்பை பார்த்துவிட்டு முகம் சுழிப்பீர்கள் என்றால் அதன் வலி கக்கூஸ் இல்லாத வீடுகளுக்குத் தான் தெரியும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ‘ஜோக்கர்’ படம் கூட கக்கூஸ் இல்லாத வீட்டின் வலியை பேசிய சினிமா தான்!

இனி விசயத்துக்கு வருவோம்...வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரத்தை சேர்ந்தவர் இஷானுல்லா. கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் ஏழ்மையான சூழலால் கழிப்பிடம் இல்லை. இதனால் ஓப்பன் டாய்லெட் எனப்படும் திறந்தவெளி, மறைவிடத்தை பயன்படுத்தி வந்தனர். இது அவரது 7வயது மகளான ஹனிபா ஹாஜராவுக்கு அவமானமாக இருந்துள்ளது. தற்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் அவர், எல்.கே.ஜி படிக்கும் போதில் இருந்தே வீட்டில் கழிப்பறை கட்டிக் கேட்டு தந்தையிடம் கெஞ்சி வந்திருக்கிறார்.

ஆனால் தந்தை செய்யாததால் ஒருகட்டத்தில் எரிச்சல் அடைந்த சிறுமி ஆம்பூர் போலீஸ் ஷ்டேசனுக்கு தந்தை மீது புகார் எழுதி கொண்டு சென்றுள்ளார். போலீஸ் தரப்பில் இது நகராட்சியின் சுகாதார பிரிவின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது. இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகமே அவரது வீட்டில் கழிப்பிடம் கட்டிக் கொடுத்துள்ளது. கூடவே இந்த சிறுமியை ஆம்பூர் நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராகவும் நியமித்துள்ளது அரசு...அட்ரா சக்கை!


நண்பர்களுடன் பகிர :