கன்னியாகுமரி போனா இனி இதையும் பாருங்க... Description: கன்னியாகுமரி போனா இனி இதையும் பாருங்க...

கன்னியாகுமரி போனா இனி இதையும் பாருங்க...


கன்னியாகுமரி போனா இனி இதையும் பாருங்க...

வாழ்க்கையில் கன்னியாகுமரிக்கு ஒருமுறை கூட போகாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு போனா மறக்காம இனி இதையும் பாருங்க...அது என்னவென்று தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்..

முக்கடல் சங்கமம், விவேகானந்தர் பாறை, படகு சவாரி, 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை, காந்தி, காமராஜர் மண்டபம் என ஏராளமானவை குமரியில் பார்க்க இருக்கிறது. இதையெல்லாம் தான் வழக்கமாக பார்த்தும் வருகிறோம். இப்போது கன்னியாகுமரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பிரமாண்டமான பீடம் கட்டி போஸ்ட் பாக்ஸ்ம் வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் பாக்ஸில் என்ன விசேசம் என்கிறீர்களா?

இது குமரி மாவட்டத்தை ஆட்சி செய்த திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்து போஸ்ட் பாக்ஸ் என்பது தான் விசேசம். குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இருந்த இந்த தபால் பெட்டியை சுற்றுலா பயணிகளும் பார்க்கும் வகையில் கன்னியாகுமரியில் பீடம் கட்டி வைத்துள்ளனர். இந்த போஸ்ட் பாக்ஸில் லெட்டர் போட்டு எடுத்து செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய திருவிதாங்கூர் அரசின் சங்கு முத்திரையோடு இருக்கிறது இந்த போஸ்ட் பாக்ஸ். இதே போல் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் திருப்பதி தேவஸ்தான கோயிலும் கட்டப்பட்டுள்ளது. அடுத்தமுறை குமரிக்கு போனா இதையெல்லாம் மறக்காம பார்த்துடுங்க!


நண்பர்களுடன் பகிர :