சிங்கம் சூர்யா ஸ்டைலில் கெத்து காட்டிய போலீஸ்காரர் கூலிப்படையை ஆடியோவில் தெறிக்கவிட்டு அசத்தல்! Description: சிங்கம் சூர்யா ஸ்டைலில் கெத்து காட்டிய போலீஸ்காரர் கூலிப்படையை ஆடியோவில் தெறிக்கவிட்டு அசத்தல்!

சிங்கம் சூர்யா ஸ்டைலில் கெத்து காட்டிய போலீஸ்காரர் கூலிப்படையை ஆடியோவில் தெறிக்கவிட்டு அசத்தல்!


 சிங்கம் சூர்யா ஸ்டைலில் கெத்து காட்டிய போலீஸ்காரர்     கூலிப்படையை ஆடியோவில் தெறிக்கவிட்டு அசத்தல்!

'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்” படம் போல் பயந்தாங்கொள்ளி போலீசார் சிலர் உண்டு. அதே நேரம் சிங்கம் சூர்யாவைப் போலும், சாமி விக்ரமைப் போலும் மிடுக்கான போலீஸாரும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு மிடுக்கான போலீஸின் கதை இது!

கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் எஸ்.ஐயாக இருப்பவர் இசக்கி ராஜா. லோக்கலில் உலாவரும் ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அவர் வெளியிட்ட ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் என்ன இருக்கிறது தெரியுமா? மேட்டர் இதுதான். ‘’யாராவது குரூப் ஆரம்பிங்க...அத்தனை பேரையும் தூக்குறேன். அந்த பாய்க்கு காசு கொடுத்துத்தான் வெட்டத் தெரியும். சுயமாக எதுவும் செய்ய முடியாது. பாய்க்கு திறமை இல்ல. உங்களையெல்லாம் காசு கொடுத்து தீவிரவாதி ஆக்கி வைச்சுருக்காங்க தெரியுமா உங்களுக்கு? சாராயம், மூளைச்சலவைன்னு செஞ்சு உங்களை தீவிரவாதியாக்கி வைச்சுருக்காரு. அந்த அப்துல் ரஹீம் பாய்கிட்ட சொல்லிடு. நான் கோவில்பட்டியில் இருக்கும் வரை கூலிப்படையை வைச்சு அறுவா பிடிக்கணும்ன்னு நினைச்சா என்ன பண்ணுவேன்னே தெரியாது. எங்கே இருந்தாலும் தூக்குவேன். குரூப் ஆரம்பிச்சா தொலைச்சுருவேன்” என தெறிக்க விட்டுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :