மருத்துவனைக்கு படையெடுத்த தெருநாய்கள் ஏன் தெரியுமா? இது நன்றிப் பதிவு! Description: மருத்துவனைக்கு படையெடுத்த தெருநாய்கள் ஏன் தெரியுமா? இது நன்றிப் பதிவு!

மருத்துவனைக்கு படையெடுத்த தெருநாய்கள் ஏன் தெரியுமா? இது நன்றிப் பதிவு!


மருத்துவனைக்கு படையெடுத்த தெருநாய்கள் ஏன் தெரியுமா? இது நன்றிப் பதிவு!

நன்றிக்கு உதாரணமாக நாயை சொல்வார்கள். ஆனால் அது வெறும் வார்த்தையல்ல என்பதை இந்த சம்பவம் ஆணித்தரமாக உணர்த்தியுள்ளது. அது என்ன எனத் தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்.

சீசர் என்பவர் அவ்வப்போது தன் ஓய்வு நேரத்தில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரிதாக கையில் பணம் இல்லாவிட்டாலும் பிஸ்கட் பாக்கெட்களை வாங்கி வழங்குவார். இந்நிலையில் சீசருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் அவரது வீட்டு பக்கத்திலேயே ஒரு மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்க்கப்பட்டார்.

வழக்கமாக குறிப்பிட்ட நாள் இடைவெளியில் உணவிட வரும் சீசரை காணாது அவர் இருக்கும் மருத்துவமனைக்கே வந்து விட்டன தெருநாய்கள். அவை மருத்துவமனை வாசலில் இருந்து சீசரை எதிர்நோக்கி காத்திருந்தன. மருத்துவமனை ஊழியர் ஒருவர் இதை புகைப்படம் எடுத்து சீசருக்கு காட்ட, அவரும் உருகிப் போனார். ஏக்கத்தோடு காத்திருக்கும் அந்த நாய்கள் மருத்துவமனையில் காத்திருக்கும் படத்தை ஒருமுறை பாருங்கள். நீங்களும் உருகிப் போவீர்கள்!


நண்பர்களுடன் பகிர :