பட்டி தொட்டியிலும் வைரலாகும் மெட்டிஒலி கோபி Description: பட்டி தொட்டியிலும் வைரலாகும் மெட்டிஒலி கோபி

பட்டி தொட்டியிலும் வைரலாகும் மெட்டிஒலி கோபி


 பட்டி தொட்டியிலும் வைரலாகும் மெட்டிஒலி கோபி

இணையதள பிரியர்களுக்கு வைச்சு செய்வதற்கென்றே வாரத்துக்கு ஒருவர் கிடைத்து விடுகிறார். ஸ்ரூவ் கரணைத் தொடர்ந்து இந்த வாரம் அந்த வரிசையில் சிக்கியிருப்பது திருமுருகன். அட நம்ம மெட்டி ஒலி கோபி தானுங்கோ!

’’அம்மி அம்மி அம்மி மிதிச்சு...அருந்ததி முகம் பார்த்து’’ ன்னு மெட்டி ஒலி டைட்டில் சாங் ஒலிக்காத மாலை நேரத்து வீடுகளே இல்லாத ஒரு காலம் இருந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான இந்த நாடகம் சக்கைபோடு போட்டது. அதில் கோபியாக நடித்து, நாடகத்தை இயக்கியவர் தான் திருமுருகன். அவரது நாடகங்களில் எல்லாம் அவர் புகழ்பாடும், அதாவது தன்னை சராசரிக்கும் அப்பால் அதிகபட்ச நல்லவனாக காட்டிக் கொள்ளும் தன்மை அவருக்கு அதிகம். அதுவே சீரியலைப் பார்க்கையில் சிலநேரம் சிரிப்புக் காட்சிப் போலவே ஆக்கி விடுவதும் உண்டு.

தூர்தர்ஷனில் கோகுலம் காலணி சீரியல் எடுத்து அறிமுகமான திருமுருகன், சன் டிவி மெட்டி ஒலியால் பிரபல்யமானார். இந்த நாடகம் 800 எபிசோடுகள் ஓடி மெகா ஹிட்டானது. தொடர்ந்து அந்த பத்து நாட்கள், கார்த்திகைப் பெண்கள்,தேன் நிலவு, நாதஸ்வரம், குலதெய்வம் ஆகிய சீரியல்களை இயக்கியவர் இப்போது கல்யாண வீடு எடுத்து வருகிறார். இவர் எடுக்கும் சீரியர்களில் எல்லாம் மிஸ்டர் க்ளீனாக அவரை முன்னிறுத்துவது அவரது வழக்கம்.

பரத், கோபிகா நடிப்பில் 2006ம் ஆண்டு எம்மகன் படத்தையும் இவர் இயக்கி இருந்தார்,. இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றவர் அடுத்து அதே பரத்தை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் எடுக்க அது தோல்வியடைந்தது. இதனால் சீரியலையே கெட்டியாக பிடித்துக் கொண்ட இவர் சன் தொலைக்காட்சியின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்...ஆனால் நம்பிக்கைக்குரிய நடிகரா? நகைப்புக்குரிய நடிகரா? என நெட்டிசன்கள் பராண்ட என்ன காரணம்? நீங்களே இந்த வீடீயோக்களை பாருங்க...

இந்த வார நெட்டிசன் கொண்டாட்ட மனிதர் நம்ம திருமுருகன் தான்...அட கோபி தாணுங்கோ!


நண்பர்களுடன் பகிர :