இடியட்டா டிரம்ப்? சுந்தர்பிச்சை தெளிவான விளக்கம் Description: இடியட்டா டிரம்ப்? சுந்தர்பிச்சை தெளிவான விளக்கம்

இடியட்டா டிரம்ப்? சுந்தர்பிச்சை தெளிவான விளக்கம்


இடியட்டா டிரம்ப்? சுந்தர்பிச்சை தெளிவான விளக்கம்

கூகுளில் இடியட் என தேடினால் ஏன் டிரம்ப் படம் வருது தெரியுமா?

உணவு, உடை, உறைவிடம் என்னும் அடிப்படை தேவைகளோடு கூகுளையும் சேர்க்காதது மட்டும் தான் குறை. அந்த அளவுக்கு மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று ஆகியுள்ளது கூகுள். அந்த கூகுள் இணையத்தில் இடியட் எனத் தேடினால் டிரம்பின் புகைப்படம் வந்து விழுகிறது. இது உலக அளவில் வைரலாகி வரும் நிலையில், அது ஏன் என விளக்கம் அளித்துள்ளார் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை.

அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது என்ற புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க ஆஜர் ஆனார் சுந்தர் பிச்சை. அப்போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோய் லாவ்க்ரேன் என்பவர் கூகுளில் இடியட் எனத் தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புகைப்படம் வருவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அழகான விளக்கம் அளித்தார் சுந்தர் பிச்சை. அப்போது அவர் கூறுகையில், ‘’கூகுளுக்கு இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஏதாவது ஒருகுறிப்பிட்ட வார்த்தையைத் தேடும்போது, கூகுள் பலகோடி இணைய பக்கங்களை ஆய்வு செய்யும். அதில் டிரம்ப் பெயரை அதிகமானோர் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துறாங்கன்னும் ஆய்வு செய்யும். அதன் முடிவைத் தான் கூகுள் வெளிப்படுத்தும். இதுதான் கூகுளின் பணி!”என்றார் சுந்தர் பிச்சை.

ஆக, உலகின் பல பகுதியிலும் டிரம்பின் பெயரை இடியட் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :