உயர்அதிகாரியை ’அப்பா’ என அழைத்த காப்பக குழந்தைகள் : இந்த அதிகாரியை வாழ்த்தாமல் இருக்க முடியாது: உருக வைக்கும் பதிவு Description: உயர்அதிகாரியை ’அப்பா’ என அழைத்த காப்பக குழந்தைகள் : இந்த அதிகாரியை வாழ்த்தாமல் இருக்க முடியாது: உருக வைக்கும் பதிவு

உயர்அதிகாரியை ’அப்பா’ என அழைத்த காப்பக குழந்தைகள் : இந்த அதிகாரியை வாழ்த்தாமல் இருக்க முடியாது: உருக வைக்கும் பதிவு


உயர்அதிகாரியை ’அப்பா’ என அழைத்த காப்பக குழந்தைகள் : இந்த அதிகாரியை வாழ்த்தாமல் இருக்க முடியாது: உருக வைக்கும் பதிவு

ஆட்சியர் பணியை ஒயிட் காலர் ஜாப்பாக நினைத்து வலம் வரும் ஆட்சியர்கள் பலருண்டு. ஆனால் அதை மக்களுக்கு சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பாக பணி செய்பவர்களும் உண்டு. அப்படி செய்த ஆட்சியர் ஒருவர் நீண்ட காலத்துக்கு பின்பு, உயர் பதவி பெற்று பணி செய்த மாவட்டத்துக்கு செல்ல காப்பக குழந்தைகள் ‘அப்பா’ என அழைத்து உருக வைத்துள்ளனர்.

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் சுனாமி தாக்கிய உக்கிரம் இன்னும் கூட சோகத்தை ஏற்படுத்தக் கூடியது. 99 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர். அவர்களுக்கென, ‘’அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை ’’ தொடங்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன். அவர் தான் ஜெயலலிதாவின் திட்டத்தை களத்தில் இருந்து வெற்றிகரமான காப்பகமாக மாற்றிக் காட்டினார்.

கீச்சாங்குப்பம் பாலம் பகுதியில் 2 வயது நிரம்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மீனா, வேளாங்கண்ணி ஆலயத்தில் 3 வயது நிரம்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சவுமியாவும் கூட இந்த காப்பகத்துக்கே வந்தனர். ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன் தன் ஓய்வு நேரங்களில் மனைவி கீர்த்திகாவோடு அடிக்கடி காப்பகத்துக்கு வருவார். இதனால் காப்பக குழந்தைகள் ராதாகிருஷணனை அப்பா என்றும், அவரது மனைவி கீர்த்திகாவை அம்மா என்றும் அழைத்து வந்தனர். ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்த பணிக்காக வந்தார். அப்போது காப்பகம் குறித்து கேட்க, அப்போது இருந்து இப்போது வரை அங்கு தங்கியுள்ள மீனா அப்பகுதி பள்ளி ஒன்றில் பனிரெண்டாம் வகுப்பு படிப்பதாக தெரிய வந்தது.

உடனே பள்ளிக்கே போய்விட்டார் ராதாகிருஷ்ணன். அவரைப் பார்த்ததும் ‘’மீனா’’ ....’’அப்பா’’ என அழைத்து நெகிழ்ந்து போனார். இதைக் கேட்டதும் ராதாகிருஷ்ணனும் கண்ககங்கிவிட்டார். தொடர்ந்து என்ன படிக்க விரும்புகிறாய் என்று கேட்டதும் ...’’பிகாம் என சொன்னார் மீனா”. உடனே அதற்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உருவவைத்து விட்டார் ராதாகிருஷ்ணன். மற்றொரு மாணவியான சவுமியா கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கும் போன் செய்து பேசினார் ராதாகிருஷ்ணன். விரைவில் நேரில் பார்க்க வருவதாகவும் சவுமியாவிடம் சொல்லியுள்ளார் ராதாகிருஷ்ணன்.

இப்படிப்பட்ட நல்ல அன்பான அதிகாரியை நாமும் வாழ்த்தலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :