லாட்டரிசீட்டு நடத்தி இராஜகோபுர பணி..இது சுசீந்திரம் ஆச்சர்யம்! Description: லாட்டரிசீட்டு நடத்தி இராஜகோபுர பணி..இது சுசீந்திரம் ஆச்சர்யம்!

லாட்டரிசீட்டு நடத்தி இராஜகோபுர பணி..இது சுசீந்திரம் ஆச்சர்யம்!


லாட்டரிசீட்டு நடத்தி இராஜகோபுர பணி..இது சுசீந்திரம் ஆச்சர்யம்!

சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் சேர்ந்து காட்சி தரும் ஆலயம் சுசீந்திரம். கன்னியாகுமரி செல்லும் வழியில் இருப்பதால் ஆன்மீக அன்பர்கள் மட்டும் அல்லாது, குமரிக்கு சுற்றுலா வருவோரும் கூட சுசீந்திரத்தை தரிசித்து செல்வது வழக்கம்.

கம்பீரமான சுசீந்திரத்தின் இராஜகோபுரத்தை காணவே கண்கோடி வேண்டும். தமிழக அரசு லாட்டரி சீட்டை தடை செய்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பெரும்பகுதி உழைக்கும் மக்கள் தங்கள் வருமானத்தை லாட்டரிக்கே செலவிட்டதால் இந்நடவடிக்கையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்திருந்தார். லாட்டரி சீட்டின் இன்றைய காலம் தான் இப்படி. ஆனால் மன்னர் ஆட்சிக்காலத்திலேயே லாட்டரி சீட்டு ஓகோவென இருந்துள்ளது. சுசீந்திரம் கோவில் ராஜகோபுரமே லாட்டரி சீட்டு நடத்தியே கட்டப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக ஸ்ரீஆயில்யம் திருநாள் மகாராஜா இருந்தபோது இராஜ கோபுரத் திருப்பணிக்காகப் பரிசுச் சீட்டு நடத்தப்பட்டது. 1875-ல் இந்தப் பரிசுச்சீட்டு வெளியிடப்பட்டது. திருப்பணிக்கு மொத்தம் 70 ஆயிரம் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. மன்னர் 30 ஆயிரம் ஒதுக்கினார். மீதி 40 ஆயிரமும் பரிசுச் சீட்டு மூலம் வசூல் செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் 3 ரூபாயாக இருந்த அந்த காலத்திலேயே இந்த பரிசுச் சீட்டு ஒரு ரூபாய்!

சுசீந்திரத்தில் மார்கழித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. சுசீந்திரம் பக்கம் போனா ராஜகோபுரத்தையும், அந்த பரிசுச்சீட்டையும் நினைச்சுக்கோங்க!


நண்பர்களுடன் பகிர :