துக்க வீட்டில் இந்த குரங்கு செய்த வேலையை பாருங்க... Description: துக்க வீட்டில் இந்த குரங்கு செய்த வேலையை பாருங்க...

துக்க வீட்டில் இந்த குரங்கு செய்த வேலையை பாருங்க...


துக்க வீட்டில் இந்த குரங்கு செய்த வேலையை பாருங்க...

சேட்டை செய்யும் மனிதர்களைக் கூட குரங்கு சேட்டை என கிண்டலாக சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் குரங்கு சேட்டைக்கு மட்டுமல்ல, இனி பாசத்துக்கும் முன்னுதாரணம் சொல்லலாம். ஏன் எனத் தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்...

கர்நாடகா மாநிலம் நரகுந்தா பகுதியைச் சேர்ந்த நாகனகவுடா பாட்டீலுக்கு 71 வயது. எப்போதும் போல் தன் வேலைகளை முடித்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருந்தவர் திடீரென நெஞ்சை பிடித்து விட்டு சரிந்தார். பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். டாக்டர்கள் சோதித்ததில் நாகனகவுடா பாட்டீல் மாரடைப்பில் மரணம் அடைந்தது தெரிய வந்தது.

உடனே சொந்த, பந்தங்களுக்கு தகவல் சொல்லப்பட்டு அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. அவரது உடலுக்கு மாலை அணிவித்து வீட்டில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அப்போது திடீரென வீட்டுக்குள் ஒரு குரங்கு நுழைந்தது. சடலத்தின் முன்பு இருந்த இறந்தவர்களின் உறவுகளோடு அமர்ந்து கொண்ட குரங்கு மவுன அஞ்சலி செலுத்தியது. இதைப் பார்த்து துக்க வீடு என்பதையும் மறந்து மூக்கில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்தனர் இறந்தவரின் உறவுகள்.

அப்போது வாசலுக்கு வந்த குரங்கு அங்கு இறந்தவரின் மகன் மரிகவுடாவின் தோளை பற்றி ஏறி, தலைமை சாந்தமாக தடவிக் கொடுத்து ஆறுதல் சொன்னது. மேலும் தோள்களிலும் சிறிதுநேரம் அமர்ந்து கொண்டது.

சேட்டை, தொந்தரவுக்கு பேர் பெற்ற குரங்கின் இந்த செயல் தான் இப்போது கர்நாடாகவின் வைரல் மேட்டர்!


நண்பர்களுடன் பகிர :