மீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள் Description: மீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள்

மீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள்


   மீண்டும் இயக்க வரும் நடிகர் அழகம்பெருமாள்

இயக்குநர் மணிரத்தினத்தின் பயிற்சி பட்டறையில் உருவானவர் அழகம்பெருமாள். ரஜினிகாந்தின் தளபதி படம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த போது அவரிடம் இணை இயக்குநராக சேர்ந்தார். இன்று வரை இவர்கள் பந்தம் தொடர்கிறது.

மணிரத்தினத்தின் தயாரிப்பிலேயே மாதவன், ஜோதிகா நடிப்பில் ’டும் டும் டும்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார் அழகம்பெருமாள். கிராமத்து காதல் சப்ஜெட்டான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ஸ்ரீகாந்த் நடித்த ‘’ஜூட் ஆர் யூ ரெட்”, விஜய், சிம்ரன் நடிப்பில் ‘உதயா’ ஆகிய படங்கள் பெரிதாக எடுபடவில்லை.

இதனால் இயக்கத்தை மூட்டை கட்டி வைத்திருந்த அழகம்பெருமாள் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார். தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ வில்லத்தனமான அரசியல்வாதியாக நடித்தார். அது எடுபடவே, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலூர் மாவட்டம், தெறி, நானும் ரவுடிதான் என வரிசையாய் பல படங்களில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து வருகிறார். வரும் 21ம் தேதி திரைக்கு வரும் ஜெயம் ரவியின் ‘’அடங்கமறு” வில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் நடித்துள்ளார் அழகம்பெருமாள்.

என்னதான் நடிகராக வலம் வந்தாலும், மீண்டும் இயக்குநர் ஆகாமலே இருந்த வருத்தத்தில் இருந்த அழகம்பெருமாள் இப்போது மீண்டும் இயக்குநர் ஆகும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். ‘’நானும் ரவுடி தான்’’ படப்பிடிப்பின் போதே விஜய் சேதுபதியிடம் தன் விருப்பத்தைச் சொல்ல அவரும் சம்மதித்துள்ளார். அழகம்பெருமாள்_விஜய்சேதுபதி கூட்டணியில் விரைவில் புதிய பட அறிவிப்பு வரக்கூடும்!


நண்பர்களுடன் பகிர :