ரீமேக்கில் 99 ஆகும் 96...த்ரிஷா இடத்தில் பாவனா Description: ரீமேக்கில் 99 ஆகும் 96...த்ரிஷா இடத்தில் பாவனா

ரீமேக்கில் 99 ஆகும் 96...த்ரிஷா இடத்தில் பாவனா


ரீமேக்கில் 99 ஆகும் 96...த்ரிஷா இடத்தில் பாவனா

ஆட்டோகிராப் படத்தில் மல்லிகா ‘’ஹேப்பி வயசுக்கு வந்த டே”ன்னு நம்ம சேரன் பூவை கொடுப்பாரே, அதுக்கப்புறம் பள்ளிக் கூடத்து காதலை அப்படியே பந்தி வைச்சபடம் 96 தான்!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரை இயக்குனராக உயர்த்திய இப்படம் மெகா ஹிட் பெற்றது. பள்ளிக் கூடத்துக்கு காதலை மையப்படுத்திய படம் தான் என்றாலும், ஒட்டுமொத்த திரைப்பட பிரியர்களாலும் கொண்டாடப்பட்டது. திரையில் வெற்றிக்கரமாக 96 ஓடிக் கொண்டிருக்கும் போதே சன் டிவியிலும் ஒளிபரப்பாக அதன் பின்னரும் திரையிலும் ஓடி சாதனை புரிந்தது 96

தெழுங்கிலும் விரைவில் 96 வருகிறது. அங்கும் த்ரிஷாவே நாயகியாக நடிக்கிறார். நாயகனாக நடிக்க அல்லு அர்ஜீன், நானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.கன்னடத்தில் ப்ரீதம் குப்பி இப்படத்தை இயக்க உள்ளார். இதில் திரிஷா பாத்திரத்தில் நடிப்பது கேரளத்து பைங்கிளி பாவனா. விஜய் சேதுபதி பாத்திரத்தில் கோல்டன் சுரேஷ் நடிக்கிறார். இவர்களின் வயதைக் கணக்கிட்டு படத்துக்கு 99 என பெயர் வைத்துள்ளது படக்குழு.


நண்பர்களுடன் பகிர :