ஆரவ்வோடு ஆட்டம் போட்ட ஓவியா Description: ஆரவ்வோடு ஆட்டம் போட்ட ஓவியா

ஆரவ்வோடு ஆட்டம் போட்ட ஓவியா


 ஆரவ்வோடு ஆட்டம் போட்ட ஓவியா

பிக்பாஸ் ப்ரோகிராமில் ஓவியாவுக்கும், ஆரவ்க்கும் இடையே காதல் பற்றியது ஊர் அறிந்த செய்தி. ’’கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்’’ என ப்ரோகிராமிலேயே ஆரவ்வைப் பார்த்து உருகினார் ஓவியா.

ஆனால் ஆரவ்வோ, ஓவியாவை கை கழுவி விட்டதைப் போலத் தான் பிக்பாஸில் நாமெல்லாம் பார்த்தோம். ஆனால் பிக்பாஸ் ஒன்று முடிந்து, பாகம் இரண்டே முடிந்து விட்டது. அதே வேகத்தில் ஓவியா, ஆரவ் இடையே நெருக்கமும் விறு, விறுன்னு வளர்ந்துடுச்சு என்கின்றனர் இருதரப்பிலும் நெருக்கமானவர்கள்.

இருவரும் சேர்ந்து ஒன்றாக சுற்றுவதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது அல்லவா? அதற்கான பிண்ணனிகள் இப்போது வெளியாகி உள்ளது.ராஜபீமா என்றொரு படத்தில் நடித்து வருகிறார் ஆர்வ். இப்படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவிகிதம் முடிந்துள்ளது. இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் ஓவியா. இது நட்புக்கு மரியாதையா? அல்லது காதலுக்கு மரியாதையா? என பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதித்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.


நண்பர்களுடன் பகிர :