ஜானி’யாவது போனி ஆகுமா? எதிர்பார்ப்பில் பிரசாந்த்! Description: ஜானி’யாவது போனி ஆகுமா? எதிர்பார்ப்பில் பிரசாந்த்!

ஜானி’யாவது போனி ஆகுமா? எதிர்பார்ப்பில் பிரசாந்த்!


ஜானி’யாவது போனி ஆகுமா? எதிர்பார்ப்பில் பிரசாந்த்!

டாப் ஸ்டார், சிந்து கட்டழகன் என ரசிகர்களால் உச்சிமுகர்ந்து கொண்டாடப்பட்ட பிரசாந்த் சமீபகாலமாக மார்க்கெட் இழந்து தவித்து வருகிறார். அண்மையில் மாற்று மொழி படம் ஒன்றில் துணை நடிகராக பிரசாந்த் நிற்க தவித்து போன அவர் ரசிகர்களுக்கு தீனி கொடுக்க மீண்டும் நாயகனாக அரிதாரம் பூசியுள்ளார் பிரசாந்த். நாளை இப்படம் வெளியாகிறது.

திரைப்பட இயக்குநரும், நடிகருமான தியாகராஜனின் மகனான பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். செம்மருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, காதல் கவிதை, ஹலோ, மஜ்னு, தமிழ், வின்னர், பூமகள் ஊர்வலம், பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா என பல வெற்றிப்படங்களை கொடுத்த பெருமையும் பிரசாந்த்க்கு உண்டு. ஆனால் சமீககாலமாக பிரசாந்த் படங்கள் எதுவும் பெரிதாகப் போகவில்லை.

இழந்த மார்க்கெட்டை தக்கவைக்க தனது தந்தை தியாகராஜன் நடித்து மெகா ஹிட்டான மலையூர் மம்பட்டியான் படத்தை ரீமேக் செய்து மம்பட்டியானாக நடித்தார். ஆனால் அதுவும் பெரிதாகப் போகவில்லை. அதைத் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் சாகசம் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தார். அதுவும் பெரிதாகப் போகவில்லை. அதன் பின்னர் தமிழ்ப்படங்கள் எதிலும் பிரசாந்தை பெரிதாகக் காணவில்லை.

தெழுங்கு, மலையாளத் திரையுலகிலும் நாயகனாக நடித்துள்ள பிரசாந்த் இதுவரை 49 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் வினய விஜய ராமா என்னும் தெழுங்குப் படத்தில் பிரசாந்த் துணை நடிகராக நடித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வேதனையைத்தர சமூகவலைதளங்களிலேயே ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்பு கதாநாயகனாக நடிக்கும் ‘ஜானி’ படம் நாளை வெளியாகிறது.

ஜானி ரசிகர்கள் மத்தியில் போகியாகுமா? மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்த், டாப் கியரில் போவாரா என்பது நாளை தெரிந்துவிடும்!


நண்பர்களுடன் பகிர :