யார் இந்த தூக்கு துரை? புகைப்படத்துடன் வெளியான உண்மை தகவல்.! Description: யார் இந்த தூக்கு துரை? புகைப்படத்துடன் வெளியான உண்மை தகவல்.!

யார் இந்த தூக்கு துரை? புகைப்படத்துடன் வெளியான உண்மை தகவல்.!


யார் இந்த தூக்கு துரை? புகைப்படத்துடன் வெளியான உண்மை தகவல்.!

நடிகர் அஜித்குமார் நடித்து வெளிவர இருக்கும் படம்தான் விஸ்வாசம். அண்மையில் அப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியிடப்பட்டது. ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது அந்த படத்தின் மோஷன் போஸ்டர்.

மேலும் அந்த மோஷன் போஸ்டரில், தூக்கு துரைனா அடாவடி, தூக்கு துரைனா அலப்பறை, தூக்கு துரைனா தடாலடி , தூக்கு துரைனா கட்டுக்கடங்காத என்ற வசனம் ரசிகர்களால் அதிகம் வரவேற்பும் பெற்றது.அப்படி அந்த தூக்கு துரை பெயரில் என்னதான் இருக்கின்றது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில். அந்த பெயரின் பல தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தூக்கு துரை என்பவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வீரமரணம் அடைந்தவர். தன்னை நம்பி வந்தவருக்கு தன் தலையை கொடுத்தாவது காப்பாற்றும் குணமுடையவர்.அவர் உண்மைப்பெயர் பெரியசாமி துரை என்கின்ற தூக்கு துரை.இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து கைதான தன் நண்பருக்காக ஜெயில் அதிகாரிகளை கொன்று புதைத்து விட்டு நண்பரை காப்பாற்றியுள்ளார். இது ஆங்கிலேயர்களுக்கு தெரியவரவே அவரை சிறைபிடித்து தூக்கிலிட்டனர்.

இவரை நம்பி வந்தவர்களுக்கு இவர் செய்யும் செயல் அளப்பரியது.இதனால் இவருக்கு பல கோவில்களில் சிலை உள்ளது.மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளின் பல கோவில்களில் காவல் தெய்வமாகவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :