உங்களால் உங்கள் குழந்தையை சமாளிக்க முடியலையா? அப்போ இதுஉங்களுக்கான பதிவு! Description: உங்களால் உங்கள் குழந்தையை சமாளிக்க முடியலையா? அப்போ இதுஉங்களுக்கான பதிவு!

உங்களால் உங்கள் குழந்தையை சமாளிக்க முடியலையா? அப்போ இதுஉங்களுக்கான பதிவு!


உங்களால் உங்கள் குழந்தையை சமாளிக்க முடியலையா? அப்போ இதுஉங்களுக்கான பதிவு!

பொது இடத்திலோ அல்லது வீட்டில் அடம்பிடித்து அழும் குழந்தைகளை சமாதான படுத்த பெற்றோர்களுக்கு மிகவும் கடினமான செயல். மேலும் அடம்பிடித்து பொருட்களைத் தூக்கி வீசுவதும், தன்னை சுவரில் முட்டி கூட குழந்தைகள் அடம்பிடித்து அழும் கட்சியை பார்த்தாலே மனது பதை பதைக்கும்.

குழந்தைகள் அடம் பிடித்து அழும்போது பெற்றோர்கள் அவர்களை அடக்க கத்தி பேசுவார்கள். ஆனாலும் சில குழந்தைகள் மேலும் அடம் பிடித்து அழும். அவ்வாறான குழந்தைகளை எப்படி திருத்தி அவர்களின் குணத்தை மாற்றுவது என்பதை இங்கு பார்ப்போம்.

குழந்தைகளின் மீது அதிகம் கவனம் செலுத்துங்கள்

குழந்தைகள் பொதுவாக அழுவதற்கு காரணம், குழந்தைகளை கவனிக்காமல் அவர்கள் தங்கள் வேலைகளை செய்வது. ஆகவே சேட்டைகள் செய்யும் போது குழந்தைகளின் கவனத்தை திருப்பி அவர்களுடன் சேர்ந்து விளையாடி குழந்தைகளின் கவனத்தை பெற வேண்டும்.

ரொம்ப கண்டுக்காதீங்க.

பொது வெளியிலோ அல்லது சூப் மார்க்கெட்டிலோ குழந்தைகள் தங்களுக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டு அழுவதுண்டு. அப்போது நீங்களும் அவர்களை சமாதானப்படுத்த அதனை வாங்கி கொடுப்பீர்கள். இதுவே குழந்தைகளுக்கு சாதகமாகி அடிக்கடி இதுபோல் உங்களுக்கு தொந்தரவு கொடுப்பார்கள். ஆகவே இவ்வாறு குழந்தைகள் அடம் பிடித்து அழும் போது அவர்களை கண்டுகொள்ளாதீர்கள்.

பொறுமையாக பேசுங்கள்

குழந்தைகள் பிடிவாதம் பிடித்து அழும் பொது நீங்களும் அவர்களுடன் சேர்ந்தது கோபப்படாதீர்கள்.பொறுமையாக பேசி அவர்களுக்கு என்ன வேண்டும் என கேட்டு, அன்பாக பேசி சமாதான படுத்துங்கள்.

கவனத்தை திருப்புவது.

குழந்தைகள் அடம்பிடித்து அழும் போது அவர்களிடம் மெல்ல பேசி அவர்களின் கவனத்தை திருப்ப முயலுங்கள்.பின்பு பொறுமையாக அந்த இடத்திலிருந்து வெளியோ கொட்டி சென்று பொறுமையாக எடுத்து கூறி சமாதானப்படுத்துங்கள்.

மேல் கூறியவாறு நடந்து கொண்டாலே, உங்கள் குழந்தைகள் உங்கள் சொல் பேச்சு கேட்டு நல்ல விதமாக வளருவார்கள். மேலும் உங்களுக்கு உங்கள் குழந்தைகளின் விருப்பம் மற்றும் வெறுப்பும் தானாக புரியும்.


நண்பர்களுடன் பகிர :