சுரைக்காய் சாப்பிடுவதினால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ பயன்கள் Description: சுரைக்காய் சாப்பிடுவதினால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ பயன்கள்

சுரைக்காய் சாப்பிடுவதினால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ பயன்கள்


சுரைக்காய் சாப்பிடுவதினால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ பயன்கள்

சுரைக்காய் என்றாலே பலரும் இதில் அப்படி என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைக்கின்றனர். அப்படி நினைப்பவர்களுக்கான பதிவு இது. அதன் பயன்களை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. சிறுநீரக கோளாறு மற்றும் உடல் சூட்டை குறைக்கும் இந்தகாய்.

2. சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை அதிகம் கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற அதிகப்படியான சத்துகள் நிறைந்துள்ளது சுரைக்காய்.

3. சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறு. சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய பிரச்சனைகளுக்கு ஓரே தீர்வு இது.

4. அஜீரணக்கோளாறு இருப்பவர்களும் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் தாகம் ஏற்படாது. மேலும் உடலின் வறட்சியை போக்கும் நல்ல நிவாரணி.

5. கை, கால் எரிச்சல் உள்ளவர்கள் எரிச்சல் உள்ள பகுதியில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினாலும் சுரைக்காயை கட்டி பயன்படுத்தலாம்.

6. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடை குறையும். ஆகவே இதனை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சாம்பாரில் இட்டு சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும். மேலும் நீரிழிவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நன்கு குறையும்.

7. அதிக உஷ்ணத்தால் வரும் தலைவலி போக்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட்டு வைத்தால் தலைவலி நீங்கும்.

8. வெப்பம் நிறைந்த நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் இருக்கும். இதனால் உடலானது அதிக வெப்பத்தால் பலவகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும் மற்றும் வெப்ப சார்ந்த எந்த நோய்கள்ளும் ஏற்படாது.

9. நம் உடலில் உள்ள நீர் கழிவு சிறுநீர் வழியாகத்தான் வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள கெட்ட தாதுக்களைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது. சில நேரங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, பலவகையான இன்னல்களை நம் உடல் சந்திக்க நேரிடுகிறது. இந்த பிரச்சனைகளை போக்கி சிறுநீர் வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

10.நம் உணவு மாற்றத்தாலும், மன அழுத்தத்தினாலும் இயக்குகின்ற பித்த, வாத, கபத்தில் பித்தத்தின் நிலை உயரும் போது உடல் பலவீனமடைந்து பல நோய்கள் நம்மை தாக்க நேரிடும் நேரிடும். இந்த பித்த பிரச்சனை போக்க சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.

11. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பித்தம் சமநிலை ஆகும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கொடுத்து, உடலை வலிமையாக்குகின்றது.

12. பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைப் போக்கும், குடல் புண் ஏற்படாமல் குடலை பாதுக்காக்கும் , மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் ஒரு சிறந்த மருந்து.

13. சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் சூட்டால் ஏற்பட்ட எரிச்சல் குறையும். சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.


நண்பர்களுடன் பகிர :