தொடர்ந்து விளாம்பழம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா... Description: தொடர்ந்து விளாம்பழம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா...

தொடர்ந்து விளாம்பழம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா...


தொடர்ந்து விளாம்பழம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா...

நாம் தொடர்ந்து 21 நாட்கள் விளாம்பழம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா. தமிழர்களின் பண்பாடு கலாச்சாரங்களில் அன்று முதல் இன்றுவரை மிக முக்கியமான பழம் விளாம்பழம் ஆகும்.

சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது. பழம் மட்டுமின்றி அதன் வேர் மட்டும் இல்லை கூட சித்த மருத்துவத்திற்கு பயன்படுகின்றது.

விளாம்பழம் மரத்தின் இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. மர பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன

நாம் தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எந்த விதமான பித்த வியாதிகளும் நம்மை அண்டாது.

விளாம்பழத்தின் சில நன்மைகள் கீழே...

விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக எலும்பு மற்றும் பற்களை வலுடையச் செய்கிறது. சிறிது சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

நன்கு பசி எடுப்பதற்கும், உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு மிகவும் சக்திவாய்ந்து விளாம்பழம்.இதை சாப்பிடுவதால் உடலில் ரத்தம் அதிகரிப்பதோடு ரத்தம் சுத்தமும் ஆகின்றது.

தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், குடல் அல்சர் நன்கு குணமடையும். மேலும் வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசைந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் நரம்புத் தளர்ச்சி குணமடையும்.

பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட, பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச் சுற்றல் தீரும்.

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

விளாம் மரப்பட்டையைப் நன்கு பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தது கசாயம் ஆக்கி வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.


நண்பர்களுடன் பகிர :