sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

விடாமுயற்சி டீஸர் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்கள்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்..!

Sodukki News · 07 Nov 2024, 04:48 AM

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தல அஜித் குமார். இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் விடாமுயற்சி.லைக்கா நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தான் நடைபெற்றது.

மேலும் முக்கிய படப்பிடிப்புகள் அசர் பைஷான் வைத்தும் எடுக்கப்பட்டது.மேலும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் தல ரசிகர்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய வேளையில் இந்த படத்தினை வெளியிடுவதற்காக பட குழு அதனுடைய வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக பட குழு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் டீஸர் வரும் நவம்பர் 10 தேதி வெளியாகும் என்ற தகவலை கூறி உள்ளது. இந்த படத்தின் டீசரை எதிர்பார்த்து உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்.

Comments (0)

Login to join the conversation.