sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

TVK வெற்றி பாடலை பாடிய ராப் பாடகர் அறிவு… வாழ்வின் உணர்ச்சி பூர்வமான தருணம் என நெகிழ்ச்சி..!

Sodukki News · 29 Oct 2024, 06:28 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தளபதி 69.மேலும் இளையதளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார். மேலும் இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார்.இந்நிலையில் இவரின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்தது. இவரின் முதல் மாநாட்டில் கலந்து கொள்ளவே ஏராளமான தொண்டர்கள் வந்தனர்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தன்னுடைய கழகத்தின் கொள்கைகளை தொண்டர்கள் முன்பு கூறினார். மேலும் இவருடைய ஆவேசமான பேச்சு மற்றும் கருத்துக்கள் பலரையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த மாநாட்டில் வெற்றி வெற்றி என தொடங்கும் ஒரு கொள்கை பாடலும் ஒலிக்கப்பட்டது.இந்த பாடலை ராப் பாடகர் அறிவு பாடியுள்ளார். இவர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி ரைடு பாடலையும் பாடியுள்ளார்.

மேலும் இவர் பாடிய வெற்றி வெற்றி பாடல் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது விஜய் அண்ணாவிடம் கொள்கை பாடலை பாடுவதற்கு ஏன் என்னை தேர்வு செய்தீர்கள் என்று கேட்ட்தாகவும் அதற்க்கு விஜய் உன்னால் மட்டும் தான் இதை பண்ண முடியும் என கூறியதாகவும் மேலும் விஜயின் குரலை பதிவு செய்ததை என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது எனவும் எனக்கு இந்த வாய்ப்பினை தந்த விஜய் அண்ணாக்கு நன்றி எனவும் கூறி தன்னுடைய நெகிழ்ச்சி பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Comments (0)

Login to join the conversation.