sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

இந்த மஞ்சக்காட்டு மைனா யார் எனத் தெரிகிறதா..? இந்த குழந்தை நட்சத்திரம் இன்று பிரபலமான ஹீரோயின்…!

Sodukki News · 11 Sep 2023, 08:52 AM

பிரபலங்கள் குழந்தைகளாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை பர்ப்பது ரொம்பவே சுவாரஸ்யமான ஒன்றுதான். அந்தவகையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் குழந்தைப்பருவ புகைப்படத்தை அவரே வெளியிட அது சூப்பர், டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சுனைனா காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதில் இடம் பிடித்த உந்தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது நண்பனே பாடல் மெகா ஹிட் அடித்தது.

தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்பறவை என பல படங்களிலும் நடித்திருந்தார். அண்மையில் சமுத்திரக்கனியின் ஜோடியாக ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

நடிகை சுனைனா இப்போது தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் ஒன்றில் அவரது குழந்தைப்பருவ படமும், மற்றொன்றில் இப்போது உள்ள அவரது படமும் உள்ளது. அம்மணி இரண்டிலுமே மஞ்சள் ஆடையில் இருக்கிறார்.

முதலாவதாக குழந்தைப்பருவ போட்டோவில் மஞ்சல் நிற கவுனில் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் சுனைனா, சமீபத்திய போட்டோவில் மஞ்சள் வண்ண புடவையில் சேரில் இருந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.