sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

விஜய் டிவி மகாநதி சீரியலில் இருந்து விலகிய நாயகி.. புதிய நாயகி யார் தெரியுமா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Sodukki News · 08 Nov 2024, 07:32 AM

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி. இது சகோதரிகளின் பாச கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் ஆகும். இந்த சீரியல் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வித்தியாசமான கதை களத்தை கொண்டுள்ள இந்த சீரியலை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்த சீரியல் 443 எபிசொட்களை தாண்டி வெற்றி கரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் நாயகி ஒருவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிதாக ஒரு நாயகி வர இருக்கிறார். இந்த தொடரில் வெண்ணிலா என்ற பெயரில் நடித்த கண்மணி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பைரவா, சர்க்கார்,ரெமோ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த வைஷாலி நடிக்க இருக்கிறார்.

மேலும் இவர் ராஜா ராணி, மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சி போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர். மேலும் இவருடைய நடிப்பிற்க்கென்று அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் பல தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது மகாநதி சீரியலில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த உள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.