sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

சீரியல் நடிகரை திருமணம் செய்ய இருக்கும் லப்பர் பந்து பட நடிகை… எங்கேஜ்மெண்ட் போட்டோஸ்கள் வைரல்..!

Sodukki News · 29 Oct 2024, 05:35 AM

சமீபத்தில் வெளிவந்த படம் தான் லப்பர் பந்து. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தில் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை மௌனிகா. இவருக்கு இந்த படம் பெரியளவில் வரவேற்பை வாங்கி கொடுத்துள்ளது. இவர் கனா காணும் சீரியல் மூலமாக நடித்து பிரபலம் ஆனவர்.

இவரும் ஜீ தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்த சந்தோஷும் வெகு நாளாக காதலித்து வந்துள்ளனர். இவர் அண்ணா சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் பல தொடர்களிலும் ஒரு சில படங்களில் சில கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். திரையுலகில் இருவருமே தங்களுடைய வெற்றி பாதையை நோக்கி பயணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இருவரும் தங்களின் இரு வீட்டாரின் சம்மதத்தோடு காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் வெகு விமர்சையாக இரு வீட்டாரின் முன்னிலையில் எங்கேஜ்மெண்ட் நடந்து முடிந்தது. அதற்கான போட்டோஸ்களை தங்களுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்து பலரும் வாழ்த்து கூறியும் பாராட்டுக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

pic5

Comments (0)

Login to join the conversation.