தீபாவளியை முன்னிட்டு சும்மா அசத்தலாக செம நியூஸ் சொன்ன ரவீனா ரவி… குவியும் வாழ்த்துக்கள்..!
Sodukki News · 30 Oct 2024, 05:05 AM

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற டப்பிங் ஆர்டிஸ்டாக வலம் வந்தவர் தான் நடிகை ரவீனா ரவி. இவர் புகழ் பெற்ற டப்பிங் ஆர்ட்டிஸ்டான ஸ்ரீஜா ரவியின்மகளாகும். சினிமாவில் பல நடிகைகளுக்கு தன்னுடைய அழகிய குரல் மூலமாக டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் இவர் குரல் மூலமாக மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து மக்கள் மனதில் நின்று வருகிறார். இவருடைய குரலுக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் டப்பிங் மட்டும் இல்லாமல் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன், லவ் டு டே படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் மலையாளத்திலும் வாலாட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த நேரத்தில் பட இயக்க்குனர் தேவன் ஜெயக்குமார் என்பவர் உடன் காதல் வயப்படுள்ளார்.

இந்நிலையில் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தீபாவளியை முன்னிட்டு குட் நியூஸ் என்று சொல்லி தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.