என்பேரு படையப்பா பாடலில் வரும் குழந்தையா இது..? தற்போது இவர் பிரபலமான சீரியல் நடிகை..
Sodukki News · 13 Aug 2023, 07:44 AM

தமிழ்ப்படங்களில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் பெரிய நடிகையாக ஜொலித்திருக்கிறார்கள். நடிகை மீனா அப்படி சினிமாவுக்குள் வந்துதான் பின்னாள்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே ஜோடியாக நடித்தார். அதேபோல் இன்று சின்னத்திரையில் கோலோச்சும் நீலிமா குழந்தை நட்சத்திரமாக தேவர்மகனில் அறிமுகம் ஆனவர்தான்.

இவ்வளவு ஏன்? உலகநாயகன் கமல்ஹாசனே களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான். இப்போது படையப்பா பாடலில் வந்த குழந்தை, பிரபல சீரியல் நடிகையாக உள்ளார் என்பது நிச்சயம் உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விசயமாகத்தான் இருக்கும். படையப்பா படத்தின் என் பேரு படையப்பா பாடலில் பாசமுள்ள மனிதனப்பா..நான் மீசை வச்சகுழந்தையப்பா என ஒரு வரி வரும்.

அந்த வரியின் போது ஸ்க்ரீனில் ஒரு குழந்தையின் முகம் வந்துபோகும். அந்த குழந்தை சீரியல் நடிகை சஹானா என இப்போது தெரியவந்துள்ளது. சிவா, சஹானா இடையேயான காதலை கருவாகக் கொண்டு பிரபல டிவியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது. சஹானாவின் சொந்த ஊர் ஆந்திரா. இவரது குடும்பமே கலைக்குடும்பம் என்பது கூடுதல் தகவல்!
pic1

pic2
