sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நடிகர் ஜெய்சங்கர் மகன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகரா…? யார் அந்த பிரபலம்.. வைரல் ஆகும் புகைப்படங்கள்..!

Sodukki News · 26 Oct 2024, 05:23 AM

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் கொடிக்கெட்டி பறந்தவர்கலில் ஒருவர் தான் நடிகர் ஜெய்சங்கர். இவருடைய பெயர் சங்கர் தான் இவரின் நடிப்பு திறமையை பார்த்தே இவருக்கு ஜெய் என்ற பெயரும் கிடைக்கப்பெற்றது. மேலும் இவர் ஜெயசங்கர் என்ற பெயரில் இரவும் பகலும் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். மேலும் இவர் பழம்பெரும் நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் ஆகியோருடன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இன்றய காலகட்டத்தில் முன்னணி நடிகராக வரும் ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கும் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவரின் நடிப்பு திறமையால் இவருக்கு இன்றளவும் பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவருடைய நடிப்பு திறமையால் இவருக்கு ரசிகர்கள் கொடுத்த பெயர் ஜேம்ஸ் பாண்ட். மேலும் இவர் நடிப்பை தாண்டி பல நலத்திட்டங்களை செய்துள்ள்ளார். இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மேலும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இதில் விஜய் என்பவர் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும் இன்னொரு மகனான சஞ்சய் என்பவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கக்கூடிய பாக்யலக்ஷ்மி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இணையத்தில் பழைய நடிகர் ஜெயசங்கரின் மகன்கள் போட்டோஸ் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.