sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

பாட்டு பாடி அசத்திய நயன் மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தைகள்.. வைரலாகும் அசத்தலான வீடியோ..!

Sodukki News · 25 Nov 2024, 11:13 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா.  தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடித்த நயன்தாரா அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 வருடங்களாக காதலித்து வந்தார். மேலும் இவர்களது திருமணம் பெரும் விமர்சையாக நடந்தது. அதன் பிறகு வாடகை தாய் மூலமாக இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார் நயன். மேலும்  லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் உயிர் மற்றும் உலக் என 2 மகன்கள் இருக்கின்றனர்.

மேலும் நயன் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்திலும் நிவின் பாலியுடன் இணைந்து மலையாளத்தில் டியர் ஸ்டுடென்ட்ஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார். நயன் மற்றும் விக்னேஷ் ஜோடி தங்களுக்கு வேலைகள் இல்லாத நேரத்தில் தன்னுடைய குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடனை நேரத்தை செலவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் உயிர் மற்றும் உலக நானும் ரவுடி  தான் படத்தில் விக்கி இயக்கிய பாடலான தங்கமே உன்னைத்தான் பாடலை  அசத்தலாக பாடுகிறார்கள் .அதை கேட்டு ரசித்த  விக்கி மற்றும் நயன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்று பாசிட்டிவ்  கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

Comments (0)

Login to join the conversation.