sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

இந்த சிறுவன் யாரென்று தெரியுதா… தற்போது சின்னத்திரையை கலக்கும் காமெடி பிரபலம்…

Sodukki News · 13 Aug 2023, 08:26 AM

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் விஜய் டிவியில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். அந்தவகையில் விஜய் டிவி பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் சின்னத்திரையில் இருந்து அதிலும் விஜய் டிவி ஷோவின் மூலம் வெள்ளித்திரை நோக்கி நகர்ந்தவர்கள் தான்.

அந்த வரிசையில் விஜய் டிவி சீரியல்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.அந்த வகையில் இந்த பொடியனும் இப்போது விஜய் டிவியில் ஆஹோ, ஓஹோ பேமஸ் தான்! அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மதுரை முத்து. மதுரை ஸ்டைல் வட்டார வழக்கில் இவர் அள்ளிவிடும் காமெடிகள் ரொம்ப பிரபலம்.

தொடர்ந்து சன்டிவியிலும் ஒரு நகைச்சுவைத் தொடர் செய்து வரும் மதுரைமுத்துவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலைவிபத்தில் மரணம் அடைந்தார். அதன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்த மதுரை முத்து இப்போது குக் வித் கோமாளி ஸ்பெசல் கெஸ்டாகவும் வந்து மக்களை மகிழ்வித்து வருகிறார். அவரது பள்ளிக்கால புகைப்படம் தான் இது!

Comments (0)

Login to join the conversation.