sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் கூட்டணி சேரும் சாய் அபயங்கர்… எந்த படத்தில் தெரியுமா..!

Sodukki News · 06 Nov 2024, 09:42 AM

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரின் படங்களை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவருடைய எழுத்தில் உருவாகிவரும் படத்தில் கட்சி சேரா, ஆச கூட போன்ற ட்ரெண்டிங் பாடல் மூலமாக பிரபலம் ஆன  சாய் அபயங்கர் கூட்டணி சேர்ந்து இசையமைக்க உள்ளார். இவர் பல நிகழ்ச்சிகளில் இசைமைத்துள்ளார். இவர் ஏ ஆர் ரகுமான், அனிரூத், ஜி வி பிரகாஷ் போன்றோருடன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர்  லாகவா லாரென்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தின் மூலமாக தன்னுடைய இசை பயணத்தை ஆரம்பிக்க உள்ளார் சாய் அபயங்கார். மேலும் இந்த படத்தினை பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். மேலும் இதனை பற்றி நெகிழ்ச்சியாக சாய் அபயங்கார் பேசியுள்ளார். அதாவது இதை விட சிறந்த அறிமுகம் எனக்கு யாரும் கொடுக்க முடியாது. என்னால் இதனை கற்பனை கூட பண்ணி பாக்க முடியவில்லை. மேலும் எனக்கு இந்த வாய்ப்பினை தந்த ஸ்பெஷல் ஸ்டூடியோ, சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் மற்றும் பழனிசாமி ஆகியோர்களுக்கு என்னுடைய நன்றி என கூறி உள்ளார்.

மேலும் லாகவா லாரென்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தின் மூலமாக தன்னுடைய இசை பயணத்தை ஆரம்பிக்க இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் எனக்கு இந்த வாய்ப்பினை தந்த பாக்யராஜ் கண்ணன் அவர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் தான் லோகேஷ் கனகராஜ்க்கு மிக பெரிய ரசிகர் எனவும் அவருடைய யூனிவெர்சில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம் எனவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.   

Comments (0)

Login to join the conversation.