sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

ரப்பர் பந்தில் ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாரை விட வயது அதிகமாம்… வைரலாக்கும் இணைய வாசிகள்..!

Sodukki News · 05 Nov 2024, 06:11 AM

சமீபத்தில் வெளிவந்த படம் தான் லப்பர் பந்து. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயின் சஞ்சனாக்கு அம்மாவாக சுவாசிகா பிக்ஸ் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் ஹீரோயின் சஞ்சனாக்கு அம்மாவாக நடித்த சுவாசிகா பிக்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் . பலரும் இவர் நடித்த முதல் படம் இது தான் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை சுவாசிகா பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் கால் பதித்துவிட்டார். ஆனால் அவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. லப்பர் பந்து படத்தின் மூலமாகத்தான் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு மருமகனாக நடித்த ஹரிஷ் கல்யாணுக்கு இவரை விட வயது அதிகமாம். இவருக்கு 32 வயதும் இவரை விட ஹரிஷ் கல்யாணுக்கு 2 வயது அதிகமாம் அவருக்கு 34 வயதாம் மாமியாரை விட மருமகனுக்கு வயது அதிகம் என இணையவாசிகள் இந்த தகவலை வைரலாக்கி வருகிறார்கள்.

Comments (0)

Login to join the conversation.