sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பரிசாக புத்தாடை கொடுத்து அசத்தும் KPY பாலா..!  

Sodukki News · 01 Nov 2024, 09:11 AM

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் KPY பாலா. மேலும் இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் தொகுப்பாளராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திருக்கிறர். மேலும் தற்போது சினிமாவிலும் நடிகராக வலம் வருகிறார்.மேலும் இவர் சமூக ஆர்வலராகவும் தொண்டாற்றி வருகிறார். அவருக்கு பெரிய அளவில் வசதி இல்லை என்றாலும் தன்ககு கிடைக்கும் வருமானத்தில் பாதியை இல்லாத மக்களுக்கு உதவி செய்து சேவை ஆற்றி வருகிறார்.

இவர் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியும் கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோவும் விவசாயிகளுக்கும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி என அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் இவரின் உதவி செய்யும் குணத்தை பார்த்து நடிகர் ராகவா லாரன்ஸ் இவரை பாராட்டியும் இவரையும் தன்னுடன் இணைத்து கொண்டு இருவருமாக சேர்ந்து இல்லாத மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு மாற்று திறனாளிகளுக்கு புத்தாடைகள் வாங்கி கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார். அதற்கான வீடியோவை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் பாலாவின் இந்த செயலை பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Comments (0)

Login to join the conversation.