மாஸாக தல தீபாவளி கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா ஜோடி..!
Sodukki News · 01 Nov 2024, 06:40 AM

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் நெல்சனால் அறிமுகம் ஆனவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர். இவருடைய காமடி திறமையால் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற்றார். மேலும் இவருக்கு என்று அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் நடித்த டாக்டர் மற்றும் ஜெயிலர் படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது இவர் கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுது திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்தது. இவர்களது திருமண போட்டோஸ் .வெளியில் வந்த பிறகு தான் பலருக்கும் இவர்களுக்கு திருமணம் ஆனது தெரியும். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இந்த ஜோடி.

அவ்வப்போது தான் எடுத்து கொள்ளும் போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வார் சங்கீதா. இந்நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தற்போது தங்களுடைய தல தீபாவளி கொண்டாடிய போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த போட்டோஸ்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
