sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

துப்பாக்கியை பிடிங்க சிவா.. கடைசி நேரத்தில் வசனத்தை மாற்றிய விஜய்.. நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்..!

Sodukki News · 21 Nov 2024, 10:27 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள்  பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த கோட் படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது.இந்த படத்தில் சினிமா பிரபலங்கள் ஆன பிரசாந்த்,பிரபு தேவா, மீனாட்சி சௌத்ரி, சினேகா மற்றும் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன் போன்றோர் நடித்திருந்தார்கள்.

 மேலும் இந்த படத்தின் பாடல்கள் யுவன்ஷங்கராஜா இசையமைத்தார். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்தார். இந்த  படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை பிடிங்க சிவா என்று விஜய் கொடுப்பர். அது அவர் அரசியல் பயணம் மேற்கொள்ள போறது நாளத்தான் விஜய் கொடுத்தார் என ரசிகர்கள் பேசிவந்தனர்.

 இந்நிலையில் இது குறித்து பேசிய சிவகார்த்திகேயன் முதலில் அப்படி ஒரு வசனமே இல்ல வசனத்தை மாற்றியது விஜய் சார் தான். கடைசி நேரத்தில் தான் வசனத்தை மாற்றி பேசியுள்ளார். இது அவர் என் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு என நெகிழ்து சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.