sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

குட் பேட் அக்லி படத்தின் காட்சிகள் லீக்.. புது லுக்கில் மாஸாக இருக்கும் தல அஜித்..!

Sodukki News · 28 Nov 2024, 04:58 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் அல்டிமிஸ்டார் அஜித் குமார்.இவருக்கு அடுத்ததாக வெளிவர இருக்க கூடிய படம் தான் விடாமுயற்சி.இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில்  தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைதிரி மூவீ மைக்கேர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜனவரி 10 ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரின் 63 வது படமாகும்.

 இந்நிலையில் அஜித் இந்த படத்தில் நெகடிவ் கதாபாத்திரம் என தெரிய வந்தது. இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் தற்போது இசையமைக்கவில்லை.

இனிமேல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித்தின் புது கெட்டப் பார்க்கவே ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வாறு லீக் ஆனது என்று அதிர்ச்சிஉற்று உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Comments (0)

Login to join the conversation.