sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

நெல்சன் இயக்கத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்ன அல்லு அர்ஜுன்.. வைரலாகும் வீடியோ..!

Sodukki News · 26 Nov 2024, 06:16 AM

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்க கூடிய  படம் தான் புஷ்பா 2. இந்த படத்தில்  அல்லு அர்ஜுன்,  ரஷ்மிகா, பகத் பாசில், சுனில் அனுஷியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.

 இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் தற்போது சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்ட டைரக்டர் நெல்சன் பேசும் பொது. நான் ஒரு முறை நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல சென்றேன் . அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது. அப்போது நான் மிகவும் தயக்கத்தில் இருந்தேன். அனால் அவரோ அழகாக தமிழ் பேசினார். அப்போது நினைத்தேன் இவர் தமிழ் படங்களில் நடிக்கலாமே என்று.

 மேலும் பாட்னாவில் அவருக்கு மிக பெரிய கூட்டம் கூடியது அதனால் வரும் காலங்களில் இவர் தமிழ், ஹிந்தியில் நடிக்கலாம் என்று தோன்ற்றியது  என்று கூறினார். மேலும் தொகுப்பாளர்கள் நெல்சனிடம் அல்லு அர்ஜுனை வைத்து எப்போது படம் எடுப்பதாக கேட்ட்டார்கள். அதற்க்கு நெல்சன் அல்லு அர்ஜுன் ஓகே சொன்னால் நா ரெடி என்றார். அதற்க்கு அல்லு அர்ஜுன் கட்டை விரலை காண்பித்து நடிப்பதற்கு ஓகே சொன்னார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.