sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

பிக் பாஸில் மீண்டும் களமிறங்கும் நடிகர் கமல்ஹாசன்.. விஜய் சேதுபதி விலகுகிறாரா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Sodukki News · 27 Nov 2024, 10:38 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில்  ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. சீசன் 7 வரை கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது  விஜய் சேதுபதி தொகுத்து விளங்குகிறார்.  பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில்   தினமும் என்ன என்ன டாஸ்க் இருக்கும் என்பதை பார்பதற்கே மக்கள் விறுவிறுப்பாக இருப்பார்கள். இந்நிலையில் தற்போது  இந்த நிகழ்ச்சியில் வாரத்தின் இறுதியில் கமலஹாசன் போட்டியாளர்களை அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது போல தற்போது விஜய் சேதுபதியும் வாரத்தின் இறுதியில் போட்டியாளர்களின் தவறுகளை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.

அவருடைய பணியை அவர் பிரமாதமாக செய்துவருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுஉள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட விஜய் சேதுபதி அதிரடி ஆக்க்ஷன்  ஆக உள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தாலும் இந்த அளவுக்கு போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியது இல்லை என்று தகவலும் பரவ ஆரம்பித்து உள்ளது. தற்போது நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக இல்லாததால் மீண்டும் கமலஹாசன் வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றன்ர்.

இதற்க்கு ஏற்றவாறு மக்கள் நீதி மையத்தின் மாநில தலைவரான கோவை தங்கவேலு தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் பிக் பாஸில்  கமல்ஹாசன் மீண்டும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் ஏ ஐ பற்றி படிப்பதற்க்காக் சென்றுள்ளதாகவும் அடுத்த சீசன் முதல் அவர் தொகுப்பாளராக இணைவார் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் விஜய் சேதுபதி அப்போ விலகுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் வந்துள்ளது.

Comments (0)

Login to join the conversation.