பிரைவேட் ஜெட்டில் பறக்கும் SK.. அமரன் புரமோஷனில் மாஸாக களமிறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..!
Sodukki News · 29 Oct 2024, 10:35 AM

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவர இருக்கும் படம் தான் அமரன். இந்த படம் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்திருக்கும் படமாகும். இந்த படம் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மக்களுக்கு பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் அமரணாக சிவகார்த்தியன் நடிக்கிறார். அமரனின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள காதல் மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜன் தன்னுடைய நாட்டின் மேல் உள்ள பற்றினால் வீர மரணம் அடைந்த வரலாறு மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தை பெருமையோடு ஏற்று கொண்ட ஒரு சிங்க பெண் தான் இந்து. மேலும் மேஜர் அமரன் வீர மரணம் அடைந்த பிறகு அசோகா சக்கரா விருது வாங்கும் போது இருந்த நிமிர்வு என இவர்களின் வாழ்க்கை வரலாறை வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்த வேலையில் கோயம்புத்தூரில் வைத்தும் ப்ரோமோஷன் நடக்கிறது. அதில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பிரைவேட் ஜெட் ஒன்றில் பறந்து வந்து மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவி விஜே டு பிரைவேட் ஜெட் என்றும் கலக்குறாரு நம்ம சிவா என்று பாசிட்டிவ் கமெண்ட்ஸ் அளித்தும் சிவகார்த்திகேயனுக்கும் அமரன் படம் வெற்றி அடைய வாழ்த்து கூறியும் வருகிறார்கள்.